தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று ஆக்சிஜன் செறிவூட்டல் கருவியின் செயல்பாட்டை பரிசோதித்து பார்க்கிறார் ஆட்சியர் ம.கோவிந்தராவ்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று ஆக்சிஜன் செறிவூட்டல் கருவியின் செயல்பாட்டை பரிசோதித்து பார்க்கிறார் ஆட்சியர் ம.கோவிந்தராவ்.

தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை :

Published on

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளை அதி கரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு தொற்றை கட்டுப் படுத்த அரசுக்கு நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து மருத் துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பிக் கொண்டே வருகின்றன. புதிதாக வரும் நோயாளிகளை மருத்துவ மனையில் அனுமதிப் பதிலும், அவர்களுக்கு படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 5,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 2,800 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் பழனி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், முன்னாள் முதல்வர் மருததுரை மற்றும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் உடனிருந்தனர்.

சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் வழங்கல்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை ஆட்சியர் ம.கோவிந்தராவ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, “சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த கருவியின் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் நேரடியாக கருவியின் மூலமாக காற்றிலிருந்து 100 பேருக்கு தேவையான ஆக்சிஜனை தட்டுப்பாடின்றி வழங்க முடியும். ஸ்பிளிட்டர் பயன்படுத்தி 200 நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் தெரிந்துகொள்ள முடியும். இதில், 75 கருவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கும், 15 கருவிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், 10 கருவிகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in