கரோனா பரவலால் நேரில் சந்திப்பதை தவிருங்கள் :  அமைச்சர் அர.சக்கரபாணி வேண்டுகோள்

கரோனா பரவலால் நேரில் சந்திப்பதை தவிருங்கள் : அமைச்சர் அர.சக்கரபாணி வேண்டுகோள்

Published on

கரோனா பரவும் நேரத்தில் தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு கட்சியினருக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு ஆணையை பின் பற்றும் விதமாக அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நான் அமைச்சராகப் பொறுப்பேற்று, மாவட்டத்துக்கு வருகிறபோது எனக்கு வாழ்த்து சொல்லும் நோக்கத்துடன் நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் அனைவரும் கூடுவது என்பது கரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும் சூழலை உரு வாக்கும். எனவே முதல்வர் அறிவிப்புக்கு இணங்க கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக் கையில் ஈடுபடுமாறும், உதவி கோரும் ஏழை மக்களுக்கு திமுகவினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in