அவிநாசி அருகே விபத்தில் 4 பேர் படுகாயம் :

அவிநாசி அருகே விபத்தில் 4 பேர் படுகாயம் :
Updated on
1 min read

கோவையில் இருந்து சென்னை நோக்கி தனியார் நிறுவனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி புறவழிச்சாலை பழங்கரை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in