

கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப் பள்ளியில் விதிமுறைகளை மீறி கடைகள் திறந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மளிகை, காய்கறி கடைகள் நீங்கலாக பிற கடைகள் பகலில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்கவில்லை என அலுவலர் களுக்கு தொடர்ந்துபுகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் சமூக இடைவெளியை பின் பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. இதேபோல கிருஷ்ணகிரி டவுன் மற்றும் பெரியமுத்தூர் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடரும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடைகள் திறந்து வைத்திருந்தால் அபராததொகை அதிகமாக வசூலிக்கப் படும் என்றும், கடையை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல், வேப்பனப் பள்ளியிலும் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.