

தேனி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர் களை மீட்க நீச்சல் வீரர்கள், பேரிடர் பயிற்சிபெற்ற குழுவினர் தயார்நிலையில் உள்ளனர் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.
தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி பேசியதாவது: பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்ற நீச்சல்வீரர்கள், மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, (04546) 261093 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம், என்றார்.
இக்கூட்டத்தில் எஸ்பி இ.சாய் சரண்தேஜஸ்வி, மேகமலை வன உயிரினக் காப்பாளர் சுமேஷ்சோமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.