ஆஷா மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் :

ஆஷா மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்  :
Updated on
1 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் எம்.பி. கே.சுப்ப ராயன் அனுப்பிய கடிதம்: தமிழகத்தின் கிராமப் புறங்களில் 2,700 ஆஷா மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

கிராமப்புறங்களில் தாய்மை அடையும் பெண்களின் தாய்மைக்காலம் முழுவதும், தொடர்ந்து இடைவிடாது கண்காணித்து பிரசவம் வரையிலும் செய்யவேண்டிய, தொடர்ச்சியான மருத்துவ ரீதியிலான உதவிகளை முழுவதுமாக செய்து வருகின்றனர். மேலும் பிரசவ காலம் வரை குழந்தையின் வளர்ச்சியையும் கண்காணித்து வருபவர்கள் ஆஷா மருத்துவப் பணியாளர்கள்.

இவர்களது மருத்துவப் பணி, மலைப்பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களுக்கு தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 3000 வரை ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இரவு, பகல் பாராமல் பணியாற்றும் இவர்களை, ரூ.15,000 தொகுப்பூதிய அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய, தமிழகமுதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in