சேலம் அரசு மருத்துவமனையில் - பொதுமக்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலம் வழங்கல் :

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.        படம்: எஸ்.குரு பிரசாத்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று பொதுமக்களுக்கு இலவச மாக உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பார்சல் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உடனிருப் பவர்களின்பசியைப் போக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவசமாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன.

சேலம் மண்டலத்தில், முதல் நாளான நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளி களுடன் உடனிருப்பவர்களுக்கு, மொத்தம் 500 உணவுப் பொட்டலங் கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் இன்று (13-ம் தேதி) முதல் அரசு மருத்துவமனைகளில் உணவுப் பொட்டலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை இயக்குநர் நடராஜன் கூறியதாவது:

சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தருமபுரி மாவட்டங்களில் நாளை (13-ம் தேதி) அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் உடனிருப் பவர்களுக்கு தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அன்னதானம் வழங்கப்பட்டு வரும் கோயில்களில் வழக்கமான அன்னதானம் வழங்கும் பணியும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in