நகராட்சி காய்கறி கடைகள் காந்தி மைதானத்துக்கு மாற்றம் :

நகராட்சி காய்கறி கடைகள் காந்தி மைதானத்துக்கு மாற்றம் :
Updated on
1 min read

உதகை நகராட்சி மார்க்கெட் காய்கறி கடை வியாபாரிகளுடன், உதகை நகராட்சி அலுவலகத்தில்ஆணையர் சரஸ்வதி ஆலோசனைநடத்தினார். இதில், தொற்று பரவலைத் தடுக்க கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,அதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்புவழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி மார்க்கெட்டில் இயங்கிவந்த காய்கறி கடைகள், உதகை ஏ.டி.சி.யில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காந்தி விளையாட்டு மைதானத்தில் மார்க்கெட் இயங்கும். மார்க்கெட்டில் உள்ள மளிகைகடைகள், பழக்கடைகள், இறைச்சி கடைகள் தொடர்ந்து மார்க்கெட் உள்ளேயே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உதகை காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்ட நகராட்சி மார்க்கெட் காய்கறி கடைகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in