ஊரடங்கின் போது தடையின்றி செல்ல விவசாயிகளை அனுமதிக்க கோரிக்கை :
ஊரடங்கின்போது விவசாயிகள் தங்குதடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதில், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து விவ சாய நிலத்திற்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் வீடு வரை இருசக்கர வாகனத்தில் தான் வர வேண்டும். விளைபொருட்களை சந்தையில் விற்று மீண்டும் அதே வாகனத்தில் வீடு திரும்ப வேண்டும். மாங்காய், தேங் காய், காய்கறி, கீரை வகைகள் அறுவடை செய்ய கூலியாட்கள் வாகனத்தில்தான் செல்ல வேண்டும். இவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க முடியாது. இதனால் போலீ ஸாருக்கு அறிவுரை வழங்கி, விவசாயி என தெரிந்தால் அவரை அனுமதிக்க வேண்டும்.
