

கரோனா பாதிப்பால், கிருஷ்ண கிரியைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மேல்சோமார் பேட்டையைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் (49). கிருஷ்ணகிரி அருகே உள்ள எம்.சி.பள்ளியைச் சேர்ந்த இவர், கடந்த 1993-ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். வேப்பனப்பள்ளியில் பணியாற்றி வந்த, இவர் 3 மாதங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில், இவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.