ராமநாதபுரத்தில் 3 தற்காலிக காய்கறி சந்தைகள் :

ராமநாதபுரத்தில் 3 தற்காலிக  காய்கறி சந்தைகள் :
Updated on
1 min read

கரோனா பரவலை தவிர்க்க ராமநாதபுரத்தில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி, பழச்சந்தை கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அத்தியா வசியத் தேவைக்காக கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகை யில் காய்கறி, பழம், பூ விற்பனை செய்ய ஏதுவாக ராமநாதபுரம் நகரில் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானம், பழைய பேருந்து நிலைய வளாகம், பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே உள்ள டி ப்ளாக் போன்ற பகுதிகளில் தற்காலிக சந்தைகள் அமைக்கப் பட்டுள்ளன. இக்கடைகள் பகல் 12 மணி வரை செயல்படும். எனவே இந்த 3 இடங்களில் மட்டுமே காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகச் சந்தையை ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர் நேற்று பார்வை யிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in