தூத்துக்குடி மாவட்டத்தில் - அகழாய்வு பணிகள் நிறுத்தம் :

தூத்துக்குடி மாவட்டத்தில்  -  அகழாய்வு பணிகள் நிறுத்தம் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள்கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தஅகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சிவகளையில்கல் வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. கொற்கையில் சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

கரோனா பரவி வருவதால் தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நிறைவடைந்த பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் நடைபெறும் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in