

ஈரோட்டில் 7.13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, ஈரோட்டில் உள்ள 7.13 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி முதல் தவணைத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக இன்று முதல் (10-ம் தேதி) வரும் 12-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
எனவே, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வரும் 15-ம் தேதி முதல் தலா ரூ.2000 வீதம் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்களில், குறிப்பிட்ட நாளில், சமூக இடைவெளியினை பின்பற்றி முகக்கவசம் அணிந்து ரேஷன் கடைகளில் உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.