

செங்கல்பட்டு நகரில் சின்னம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா உள்ளிட்டபுகையிலைப் பொருட்களை செங்கல்பட்டு நகர போலீஸார் பறிமுதல் செய்து, பசுபதி(40) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர்.