

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் உதயா நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(66). அச்சக உரிமையா ளர். இவர், மே 7-ம் தேதி செங்குந்தபுரத்தில் உள்ள அவரது மற்றொரு வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.