பெரம்பலூரில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு :

பெரம்பலூரில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு :
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இன்று (மே 10) முதல் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அதிகளவிலான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளில் தங்களின் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டனர்.

இந்நிலை யில், தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, போக்கு வரத்து ஆணையர் உத்தரவின் படி பெரம்பலூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வக்குமார், பெரியசாமி மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களைக் கொண்ட குழுவினர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரம்பலூர் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப் பட்டு, மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல, வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஒரு பேருந்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in