

ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒய்.பிரகாஷ் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை மற்றும் பீடம் வண்ண மலர் களால் அலங்க ரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணியளவில் ஓசூர் நகருக்கு வந்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏபி.முருகன், ஓசூர் மாநகர பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், தனலட்சுமி, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் விஜய குமார், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, ரகுநாத், வெங்கடேஷ், சீனிவாச ரெட்டி, நாகன், பேரூர் செயலா ளர்கள் சீனிவாசன், கருணாநிதி, முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், தர், பாக்கியராஜ், சேகர், நிஷார், ஞானசேகரன், முனிராஜ், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.