

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முனிவேல் என்பவரின் மகன் விஷ்வா (12). இவர் துராப்பள்ளம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டின்அருகே விஷ்வா விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை நல்லப்பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழியில் உள்ள பாடியநல்லூர் அரசு மருத்துவமனையில் அவசரசிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விஷ்வா வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.