கிராமப்புற பெண்கள் இலவச பேருந்து பயணம் :

தமிழக அரசு அறிவித்துள்ள பெண் பயணிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை, ஆவடியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று பெண் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள பெண் பயணிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை, ஆவடியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று பெண் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 40 நகரப் பேருந்துகளில் நேற்று பெண்கள் கட்டணமின்றிப் பயணித்தனர்.

தொழில், வியாபாரம், பணி தொடர்பாக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் பெண்களுக்கு இது பயனுள்ளதாகதாக இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. பணி ஓய்வுபெறும் பலருக்கு பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற அறிவிப்பு, போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் சுமையை உருவாக்கும். எனவே, தமிழக அரசு அறிவித்தபடி, இழப்புத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல, பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பால், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in