கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது :

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது  குறித்து ஆட்சியர்  கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கரோனா சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் கிரண் குராலா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆக்சிஜன் வசதி கொண்ட325 படுக்கைகள், 100 சாதாரணபடுக்கைகள், 25 வெண்டிலேட்டர்கள் வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தமாக 450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

6,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் 319 ஆக்சிஜன் உருளைகள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் கூடுதல் கரோனா சிகிச்சை பிரிவு மையம் அமைப்பது மற்றும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆட்சியர் கிரண் குராலா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அனைத்து மருத்துவ பணிகளையும் விரைந்து முடித்துடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in