

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மஞ்சிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, சில நாட்களுக்கு முன்பு இதே ஊரில் திருமணம் நடந்தது. இது குறித்து சிறுவர் நலக்குழுமத் தலைவர் சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நடந்த விசாரணையில் திருமணம் நடந்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்மணமகன் அஜித்குமார் (22), அவரது பெற்றோர் முருகன், தெய்வராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.