

திருச்சியைச் சேர்ந்த வழக்கறி ஞர்கள் டி.ஜெயந்திராணி, எம்.சித்ரா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கரோனா பாதிப்பால் இறப்ப வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் ஒரே குடும்பத்தில் தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமே இழக்கும் குழந்தைகளுக்கு அன்பு, ஆதரவு கிடைக்கவும், அவர்களுக்கு அரசின் நலத் திட்டங்களை எளிதில் பெற்றுத்தரவும் ‘இளைப்பாறுதல் மையம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
மேலும் கரோனாவால் ஆதர வற்ற நிலைக்கு தள்ளப்பட்ட குழந்தைகளை பராமரிப் பதற்கு மண்டல வாரியாக ஒருங் கிணைந்த ஆதரவு பராமரிப்பு மையத்தை அமைக்க வேண்டும்.
கரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் இலவசமாக உயர்கல்வி வரை படிக்க புதிய சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்கவும், நிவாரண நிதியின் வைப்புத் தொகையின் ஒரு பகுதி உடனடி யாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா 3-ம் அலையில் 12 வயதுக்கு உட்பட்டோர் பாதிக்கப் படுவர் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, மாவட்டந்தோறும் அனைத்து மருத்துவ வசதிக ளுடன் கூடிய சிறார் சிறப்பு கரோனா பெருந்தொற்று தடுப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை அலகுகளை உருவாக்க வேண்டும்.
கரோனா பேரிடரால் பெற்றோர் களை இழந்து, ஆதரவற்று நிற்கும் குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.