

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஆணையர் ஜி. கண்ணன் உத்தரவுப்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் 30 இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை பகுதியில் உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பெருமாள், முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம் எதிரில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், லூர்துநாதன் சிலை, பாளை. மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
ஆறாம் பண்ணை பள்ளி வாசலில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் செயலாளர் முகம்மது மொன்னா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.