

குமரி மாவட்டம் காப்புகாடு பகுதியில் புதுக்கடை எஸ்.ஐ.அனில்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக் கிடமாக நின்ற இருவரை பிடித்து விசாரித்ததில் கொல்லங்கோட்டை சேர்ந்த சஜிர் (25), விஜின்ராஜ் (26) என தெரிய வந்தது.
அவர்களிடம் 102 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை சட்ட விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரு வரையும் போலீஸார் கைது செய்து, மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.