கரோனா கட்டுப்பாட்டை மீறி செஞ்சி வார சந்தையில் அதிகளவில் மக்கள் குவிந்தனர்.
கரோனா கட்டுப்பாட்டை மீறி செஞ்சி வார சந்தையில் அதிகளவில் மக்கள் குவிந்தனர்.

செஞ்சி வார சந்தையில் கூட்ட நெரிசல் :

Published on

செஞ்சியில் பிரதி வாரம் வெள்ளிக்கிழமை வார சந்தை நடைபெறும். நேற்றும் வழக்கம் போல் வார சந்தை நடந்தது. ஏராளமான வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பணைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆடு, மாடுகள் அதிக அளவில்விற்பனைக்கு வந்தன. பிற்பகல் 12 மணி வரை மட்டுமே சந்தைஇயங்கும்என்பதால் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்தது. அளவுக்கு அதிகமான மக்கள்வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்டம் அதிகமானதால் கரோனா பரவும் நிலை ஏற்படவாய்ப்புள்ளதாக கூறி போலீஸார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சந்தை கடைகளை அப்புறபடுத்துமாறு கூறினர். இதை தொடர்ந்து மக்களும் கலைந்து சென்றனர். செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் வாரசந்தை தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in