மருத்துவர்கள், செவிலியர்கள் தேர்வு - விருதுநகரில் இடைவெளியின்றி குவிந்த விண்ணப்பதாரர்கள் :

மருத்துவத் துறையில் தற்காலிகப் பணிக்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த விண்ணப்பதாரர்கள்.
மருத்துவத் துறையில் தற்காலிகப் பணிக்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த விண்ணப்பதாரர்கள்.
Updated on
1 min read

மருத்துவத் துறையில் அறிவித் துள்ள ஆள் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி பலரும் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2-வது அலை மிக வேகமாகப் பரவி வருவதால் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப் பிக்க இம்மாதம் 10-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டது.

அதனால், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் தரைத் தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். நோய்த்தொற்றைத் தடுக்கும் பணிக்கு விண்ணப்பிப்போர் தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளியின்றிக் குவிந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in