Regional02
தி.கோட்டில் கேபிள் ஆப்ரேட்டர் கொலை :
திருச்செங்கோடு எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50). கேபிள் ஆப்ரேட்டரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்தார். இவர் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவனாங்குறிச்சி பகுதியில் நடந்த கொலை வழக்கு பதிவாகி உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை முருகன் தனது இரு சக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்றுள்ளார். நாமக்கல் விஐபி கார்டன் செல்லும் சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பலால் வழிமறிக்கப் பட்டு முருகன் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க திருச்செங்கோடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.
