பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு :

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 4,000 கனஅடியாக அதிகரிப்பு :

Published on

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினைக் கொண்டு கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் கொடிவேரி பாசனத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கொடிவேரி பாசனத்துக்கு மட்டும் தற்போது நீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 156 கன அடியாகக் குறைந்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நேற்று நீர் வரத்து அதிகரித்தது.

நேற்று மாலை நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 4014 கனஅடியாகவும், நீர் மட்டம் 88 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் விநாடிக்கு 100 கனஅடியும் நீர் திறக்கப் படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in