தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் :

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் :
Updated on
1 min read

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அந்த பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாநகர் 12-வது தெரு முருகன் கோயில் அருகே தூத்துக்குடி ஐயப்பன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த முருகன் (58) என்பவர் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in