Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பகல் 12 மணிக்கு மேல் - கோவை, திருப்பூர், நீலகிரியில் வெறிச்சோடிய கடை வீதிகள் :

கோவை/திருப்பூர்/உதகை

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 6-ம் தேதிமுதல் 20-ம் தேதி வரை மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், மற்ற கடைகள் எதுவும் இயங்க அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. மளிகை,காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க ஏராளமானோர் திரண்டனர். டீக்கடைகளிலும், உணவகங்களிலும் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பகல் 12 மணிக்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால், மாநகரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி முழு ஊரடங்கு போல வெறிச்சோடின.

திருப்பூர் மாவட்டத்திலும் பகல்12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் நடமாட்டம் குறைந்திருந்தது. காதர்பேட்டையில் செகண்ட் சேல்ஸ்கடைகள் அடைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் காய்கறிமற்றும் உணவுப் பொருட்களைவாங்க உழவர் சந்தை, மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர். பகல் 12 மணி ஆனதும், காவல் துறைமற்றும் நகராட்சி அதிகாரிகள் நகர் முழுவதும் ரோந்து வந்து, கடைகளை அடைக்க ஒலி பெருக்கி மூலமாக அறிவித்தனர். கடைகள்முழுவதும் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் குறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x