Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாள் :

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்திலுள்ளஅனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் வாராந்திர விடுமுறை வெள்ளிக்கிழமையாகவும், பணி நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உள்ளது. ரம்ஜானை முன்னிட்டு,வரும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக உள்ளது. எனவே, அன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை நாளாகவும், அத்தியாவசியப் பொருட்கள் பெற ஏதுவாக இன்று (மே 7) பணி நாளாகவும், அதற்கு பதிலாக மே 9-ம் தேதிஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. இதர வாரநாட்களில் நியாய விலைக் கடைகள்இயங்கும்.மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடையலாம்" என்று குறிப்பி்ட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x