அரசு அனுமதிக்காத கடைகளை திறந்தால் அபராதம்: மன்னார்குடி நகராட்சி ஆணையர் :

அரசு அனுமதிக்காத கடைகளை திறந்தால் அபராதம்: மன்னார்குடி நகராட்சி ஆணையர் :
Updated on
1 min read

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மளிகை, காய்கறி, தேநீர் கடைகளை மட்டும் பகல் 12 மணிவரை திறந்துகொள்ளலாம் எனவும், மற்ற கடைகளை திறக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மன்னார்குடி நகரப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் கமலா, சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பூக்கடைகள், துணிக்கடைகள் திறந்திருந்ததைக் கண்டு, கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கமலா கூறியபோது, “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, கரோனா கட்டுப்பாடுகளை மீறி, அரசு அனுமதிக்காத கடைகளை திறந்தால், ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in