

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் காலமான நிலையில், அவரது மனைவி மணிமேகலை (62), தனது தங்கையுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மணிமேகலை யின் தங்கை எல்லப் பாளையத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றதால், மணிமேகலை மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை மணிமேகலையை பார்ப்பதற்காக அவரது மகள் ராணி சென்றபோது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது.ஜன்னல் வழியே பார்த்த போது, மணிமேகலை கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
ஈரோடு எஸ்பி தங்கதுரை, ஏஎஸ்பி கனகேஸ்வரி மற்றும் வீரப்பன்சத்திரம் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மணி மேகலை அணிந்து இருந்த 6½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவேநகைக்காக மர்மநபர்கள் மணி மேகலையை கொன்று இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர் கள் ரவிக்குமார், பாலமுருகன், பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த கொலையை மணிமேகலைக்கு நன்கு பழக்கமானவர் தான் செய்தி ருக்க கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் சந்தேகத்திட மானவர் களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, மணிமேகலை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு என்பவரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். மணிமேகலையின் கார் ஓட்டுநராக இருந்துள்ள பிரபு, நகைக்காக கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து மணிமேகலை வீட்டில் இருந்து திருடிச் சென்ற நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.