Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

தலைவர்களின் சிலைகளுக்கு விசிக மாலை அணிவிப்பு :

அரியலூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் அரியலூர் தொகுதிச் செயலாளர் மருதவாணன் தலைமையில் மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள், அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று ஊர்வலமாகச் சென்று, செட்டி ஏரிக் கரையிலுள்ள அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு களை வழங்கி கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x