தி.மலை மாவட்ட - வாக்காளர்களுக்கு : எ.வ.வேலு நன்றி அறிவிப்பு :

தி.மலை மாவட்ட -  வாக்காளர்களுக்கு : எ.வ.வேலு நன்றி அறிவிப்பு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவுக்கு 50.43 சதவீதம் வாக்குகள் அளித்து வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு எ.வ.வேலு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போளூர், ஆரணி நீங்கலாக 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆரணி, போளூர் தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றியை இழந்துள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 இடங்களில் வென்ற திமுக, இந்தமுறை 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. சென்ற முறை 42 சதவீதம் வாக்குகளை பெற்ற திமுக தற்போது 50.43 சதவீதம் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமுகவின் வெற்றிக்கு காரணமான நிர்வாகிகள், கூட்டணி இயக்க நிர்வாகிகள், தோழர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் திமுகவின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in