சிரமங்களில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களை புதிய அரசு மீட்கும் : சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் நம்பிக்கை

சிரமங்களில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களை புதிய அரசு மீட்கும் :  சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் நம்பிக்கை
Updated on
1 min read

சிரமங்களில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களை புதிய அரசு மீட்கும் என திரையரங்கு உரிமையாளர்களை சங்கத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: திரைத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் கருணாநிதி.அவர் வழியில் பொறுப்பு ஏற்க உள்ள, மு.க.ஸ்டாலினுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்துவோம். கரோனா காலகட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளோம். புதிதாக பொறுப்பு ஏற்கஉள்ள அரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சிரமங்களில் இருந்து மீளும் வகையில் திரையரங்குகள்இயங்காத காலத்துக்கான சொத்து, தொழில் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல, 8 சதவீத உள்ளூர் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். இதனை ரத்து செய்வதன் மூலம், திரையரங்கு கட்டணம் குறைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் திரையுலகைச் சேர்ந்தவர். திரைப்பட விநியோகஸ்தராகவும் இருப்பதால், எங்கள் சிரமங்கள் தெரியும். அவர் மூலமாகவும், எங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in