Published : 05 May 2021 03:13 am

Updated : 05 May 2021 03:13 am

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

புதுச்சேரியில் டெபாசிட் இழந்த அமமுக, தேமுதிக :

புதுச்சேரி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி, எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்தும், விஜயகாந்தின் தேமுதிக, நாம்தமிழர் கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.

இதில் அமமுக 23, எஸ்டிபிஐ 6 தொகுதிகளிலும், தேமுதிக26 இடங்களிலும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம்தேதி வெளியானது. இதில் அமமுக போட்டியிட்ட அனைத்துதொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. அக்கட்சியின் மாநில செயலாளரான வேல்முருகன் 1,408 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். மற்ற இடங்களில்3 இலக்கவாக்குகளை கூடஅக்கட்சியால்வாங்க முடியவில்லை. இதேநிலைதான் தேமுதிகவுக்கும் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.


அதேவேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து களமிறங்கிய நிலையில், அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓரளவு வாக்குகளை வாங்கி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x