சிறுபான்மை மக்கள் வாக்களிக்காததால் தோல்வி : ஈரோடு கிழக்கு வேட்பாளர் யுவராஜா கருத்து

சிறுபான்மை மக்கள் வாக்களிக்காததால் தோல்வி   :  ஈரோடு கிழக்கு வேட்பாளர் யுவராஜா கருத்து
Updated on
1 min read

எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தால், சிறுபான்மை மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை, அதனால்தான் தோல்வியடைந்தோம், என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் எனக்காக தேர்தல் பணியாற்றிய அதிமுக, தமாகா, பாஜக, பாமக மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சியினருக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொருத்தவரை பெரும்பான்மை மக்கள் எங்கள் கூட்டணி வெற்றி பெற வாக்களித்தனர். அதே வேலையில், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வசிக்கும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் எங்களுடைய கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை. இதுவே எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இருப்பினும், எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in