

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தி.மலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 5 பேர், பூரண குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர்களுக்கு பழங்களை கொடுத்து கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் வழி அனுப்பி வைத்தார். அப்போது, கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், நோடல் அதிகாரி சுதன், கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் முகமது சயி, தலைமை செவிலியர் உமாராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.