Published : 04 May 2021 03:13 am

Updated : 04 May 2021 03:13 am

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தட்டாஞ்சாவடி தொகுதியில் - வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றார் ரங்கசாமி :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்சாமி, இந்திராநகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோர் சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூரிடம் பெற்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் பெரும்பாலும் தொகுதி மாறி போட்டியிடுவதில்லை. ஆனால் இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி, புதுச்சேரி பிராந்தியத்தின் மற்றொரு தொகுதியான ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

ஒருங்கிணைந்த தட்டாஞ்சாவடி தொகுதியான தட்டாஞ்சாவடி, இந்திராநகர், கதிர்காமம் ஆகிய 3 தொகுதிகளிலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.


நேற்று முன்தினம் வாக்குகள்எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்பாராதவிதமாக ஏனாம் தொகுதியில் ரங்கசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு சுயேச்சை வேட்பாளர் கோலப்பள்ளி னிவாஸ் அசோக்வெற்றி பெற்றார்.

அவர் மொத்தம் 17 ஆயிரத்து 132 வாக்குகள் பெற்று இருந்தார்.ரங்கசாமிக்கு 16 ஆயிரத்து 477 வாக்குகள் கிடைத்து இருந்தது. 655 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமி தோல்வியை சந்தித்தார்.

ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றார்.இத்தொகுதியில் 12,978 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்ற சான்றிதழை நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி மன்சூரிடம் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x