Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

25 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் தொகுதியை கைப்பற்றிய திமுக :

ராமநாதபுரம் தொகுதியை 25 ஆண்டு களுக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள் ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே கோட்டையில் ஆட் சியைப் பிடிக்கும் என்ற சென்டிமெண்ட் உள்ளது. அந்த சென்டிமெண்ட் இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடந்துள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் கடந்த 1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறை, சுயேச்சை ஒருமுறை, திமுக 4 முறை, அதிமுக 6 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை வென்றுள்ளது. இதில் திமுக சார்பில் 1967-ல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி.தங்கப்பன், 1971-ல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.கே.சத்தியேந்திரன், 1989-ல் எம்.எஸ்.கே.ராஜேந்திரன், அதனை யடுத்து 1996-ல் சென்னையைச் சேர்ந்த ரஹ்மான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதன்பின்னர் தொடர்ந்து 4 தேர்தல்களில் திமுக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு இத்தொகுதி ஒதுக் கப்பட்டது. இந்நிலையில் 25 ஆண்டு களுக்குப் பின் தற்போதைய தேர்தலில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் போட்டியிட்டார். பாஜக சார்பில் டி. குப்புராமு போட்டி யிட்டார்.

இதில் முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரையும் திமுக வேட் பாளர் முன்னிலை வகித்து கடைசியில் 50312 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x