Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ராஜேந்திர பாலாஜி- - ராஜவர்மன் 2 பேரும் தோல்வி :

அதிமுகவில் போட்டியிட வாய்ப் புக் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்த பிறகும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சாத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவர்மன் (48). துரைப்பாண்டி என்ற தனது பெயரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜவர்மன் என மாற்றிக்கொண்டார்.

அதிமுக முள்ளிக்குளம் கிளைச் செயலாளராகவும், ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆா் இளைஞர் அணி இணைச் செயலாளராகவும், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவராகவும், விருதுநகர் மாவட்ட அதிமுக பொருளாளராகவும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செய லாளராகவும் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2016-ல் நடைபெற்ற சாத்தூர் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஜெயலலிதா இறந்த பிறகு அமமுக வில் இணைந்தார்.

அதையடுத்து 2019-ல் இங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ராஜவர்மன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமமுக வேட்பாள ராகப் போட்டியிட்ட எஸ்.ஜி.சுப்பிர மணியன் தோல்வியடைந்தார்.

பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.ஜி.சுப்பிரமணியன் மீண்டும் அதிமுகவில் இணைந் தார். அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி ராஜ வர்மன் எம்.எல்.ஏ.வுக்கும், மாவட்டச் செயலர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் பனிப் போர் தொடங் கியது.

சாத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் எனக் குற்றம் சாட்டினார்.

அதையடுத்து, விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி அணி, ராஜ வர்மன் அணி என உருவானது.

அதையடுத்து அதிமுக வேட் பாளர் பட்டியலில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. பெயர் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் அதிமுக வேட்பாளர் பட்டியலை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இருப்பினும் சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் தனக்கு வாய்ப்பு அளிக்காததால் அமமுக பொதுச் செயலர் தினகரனைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இந்த தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக சாத்தூரில் ராஜவர்மன் களம் இறங்கினார்.

இங்கு மதிமுக வேட்பாளர் ரகுராமன் வெற்றி பெற்றார். ராஜவர்மன் கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங் கிரஸ் வேட்பாளர் மாணிக் கம்தாகூர் வெற்றி பெற்றார்.

இதில் சிவகாசி பகுதியில் மட்டும் எதிர் வேட்பாளரை விட 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று இருந்தார். அதன் பிறகு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சிவகாசி ஒன்றியம் திமுக வசமானது.

தனக்கு செல்வாக்கு குறையத் தொடங்கியதை அறிந்த ராஜேந் திரபாலாஜி இந்தத் தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்டார்.

இருப்பினும் தற்போதைய எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொகுதியில் தனது செல்வாக்கு காரணமாக 73,780 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

கே.டி.ராஜேந்திரபாலாஜி 69,991 வாக்குகள் பெற்றார். 3,789 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இதன் மூலம் ராஜபாளையம் தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x