அருப்புக்கோட்டையில் - அரசு துறைகள் சார்பில் : கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கல் :

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் அரசு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் நேற்று வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனாவின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, போக்கு வரத்துக் காவல்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து பொது மக்களுக்கு கரோனாவில் இருந்து பாதுகாக்க கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர் ரவிச் சந்திரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

ஏராளமான பொதுமக்கள், பயணிகள் ஆர்வத்துடன் வந்து கபசுரக் குடிநீரைப் பருகினர்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண் ணன், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், காவல்துறை உதவி ஆய்வாளர்கள், நகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பு நிர் வாகிகள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in