Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

காரைக்குடியில் ஹெச்.ராஜாவை தோற்கடித்த மாங்குடி : தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற காங்கிரஸ்

தேசிய கட்சிகள் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை விட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 21,589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 2-வது முறையாக காரைக்குடி தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் துரை மாணிக்கம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜ்குமார் உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3,575 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 2,13,548 ஓட்டுகள் பதிவானது. 443 பூத்களில் பதிவான வாக்குகள் 32 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, ஹெச்.ராஜாவை விட 21,589 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை தொடர்ச்சியாக எந்த கட்சியும் வென்றதில்லை என்பதை முறியடித்து 2016, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வென்று காங்கிரஸ் கட்சி சாதனை படைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x