Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

விராலிமலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை : தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதி வாக்கு எண் ணிக்கை விடிய விடிய நடைபெற் றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் வாக்குகள் தொடர்ச்சியாக எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. இதில், திருமயத்துக்கு நள்ளிரவில்தான் முடிவு அறிவிக் கப்பட்டது.

அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றி லேயே ஒரு வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் உள்ள எண் வேறுபட்டி ருப்பதை சுட்டிக்காட்டி திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் தரப் பினர் மற்றும் அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக் கப்பட்டது.

பின்னர், குறிப்பிட்ட நேரத் துக்குப் பிறகு நடைபெற்ற 2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது 3 வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண் மாறி இருப்பதாகக் கூறி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, 3 மணி நேரத்துக்கு பின் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சணல் கயிறு சுற்றி இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தபால் வாக்குகளில் குளறுபடி நடப்பதாக கூறியும் மீண்டும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இப்படியாக மொத்தம் 4 முறை வாக்கு எண் ணிக்கை நிறுத்தப்பட்டது.

இவ்வாறு, அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. தொடர்ந்து, வாக்கு எண்ண அனுமதிக்கக் கோரி மையத்தின் வெளியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்டோரின் ஆலோசனைக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கி விடிய விடிய நடை பெற்றது. இதையடுத்து நேற்று காலை முடிவு அறிவிக்கப்பட்டது.

அதில், சி.விஜயபாஸ்கர்(அதி முக) 1,02,179, எம்.பழனியப்பன் (திமுக) 78,581, அழகுமீனா(நாம் தமிழர்) 7,035, கார்த்தி பிரபா கரன்(அமமுக) 1,228, சரவணன் (மநீம) 559 வாக்குகளை பெற்றனர். நோட்டாவுக்கு 385 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, 23,598 வாக்குகள் வித்தியாசத்தில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தத் தொகுதியில் தொடர்ச் சியாக 3-வது முறையாக எம்எல்ஏ வாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x