Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி :

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன் 16,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 75,902.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கணேசராஜா 59,416 வாக்குகள் பெற்று 2-ம் இடம்பெற்றார். அமமுக வேட்பாளர் பரமசிவஐயப்பன் 31,870 வாக்குகளுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரபாண்டி 17,654 வாக்குகளுடன் 4-ம் இடத்தையும், சுயேச்சை வேட்பாளர் கதிரவன் 1,154 வாக்குகளுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நோட்டாவுக்கு 1,537 வாக்குகள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x