Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தி.மலை அண்ணாமலையார் கோயில் முன்பு - 108 தேங்காய் உடைத்து திமுகவினர் நேர்த்திக்கடன் :

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு 108 தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்திய திமுகவினர்.

திருவண்ணாமலை

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இமாலய வெற்றியைபெற்றுள்ளதால் தி.மலை அண்ணா மலையார் கோயில் முன்பு 108 தேங்காய் உடைத்து திமுகவினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற் றுள்ளது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது திமுக. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார். மேலும், தி.மலை மாவட்டத்திலும் மகத் தான வெற்றியை திமுக பெற்றுள்ளது.

இதையடுத்து, திருவண்ணா மலை அண்ணா மலையார் கோயில் முன்பு திமுகவினர் நேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு சூடம் ஏற்றியும், 108 தேங்காய் களை உடைத்தும் வணங்கினர்.

இதில், தொமுசவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும், தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தொழிலாளர்கள் கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x