Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் - தேவையின்றி சாலைகளில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் : கோவை மாநகர், மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கோவை

முழு ஊரடங்கான இன்று அத்தியாவ சிய காரணங்களின்றி, சாலைகளில் சுற்றினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்க, ஞாயிற்றுக்கிழமையான இன்று (2-ம் தேதி ) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, நேற்று இரவு10 மணி முதல் நாளை (3-ம் தேதி) அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல், பொதுமக்கள் சாலைகளில் நடமாடதடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடப்பதால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அலுவலர்கள், ஊடகத்தினர் மற்றும் வாக்கு எண்ணிக்கை சார்ந்த பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையத்திலும், முழு ஊரடங்கு கண்காணிப்புக்காக மாநகர் முழுவதும்1000-க்கும் மேற்பட்ட காவலர்கள்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். மாவட்டப் பகுதியில் காவல் கண் காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில், 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகரப் பகுதியில் 22-க்கும்மேற்பட்ட இடங்களிலும், மாவட்டப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முன்புறம் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் திரள தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகர் மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘முழு ஊரடங்கு விதிகளை மீறி அத்தியாவ சியக் காரணங்கள் இல்லாமல் சாலைகள் சுற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x