Published : 02 May 2021 03:14 am

Updated : 02 May 2021 03:14 am

 

Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

காட்டில் வேட்டைக்கு முயன்ற 2 பேருக்கு அபராதம் :

பொள்ளாச்சி

தேயிலைத்தோட்டப் பகுதியில் காட்டுக்கோழிகளை பிடிக்க சுருக்கு கம்பியால் கண்ணி வைத்த வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு வனத்துறை யினர் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டக் காடுகளில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உட்பட்ட சங்கிலி சாலை, இடைச்சோலை பகுதியில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும்வனவர் சிவக்குமார் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வடமாநிலத் தொழிலாளர்கள் உமேஷ் ஓரா (30 மதியாஸ் முண்டா (31) ஆகியோர் சுருக்குக் கம்பியால் கண்ணி வைக்க முயன்றுள்ளனர்.

இருவரையும் வனத் துறையினர் பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள காடு களில் சுற்றித்திரியும் காட்டுக்கோழிகளை பிடிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, வன விலங்குகளை பிடிப்பது, வேட்டையாடுவது வனப்பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் என ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கிய ராஜ் சேவியர் அறிவுறுத்தினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x