பரமத்தி வேலூரில் மதுபாட்டில்களை பதுக்கிய 9 பேர் கைது :

பரமத்தி வேலூரில் மதுபாட்டில்களை பதுக்கிய 9 பேர் கைது :

Published on

பரமத்தி வேலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 223 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாகவும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைபயன்படுத்தி பரமத்திவேலூர் பகுதியில் சிலர் மதுபாட்டில் களை பதுக்கி, விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீஸா ருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பரமத்திவேலூர் பகுதியில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பொத்தனூரைச் சேர்ந்த ரவி (40), பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (28), கோகுல் (22), பாலப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (27), பொன்மலர்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (38), எஸ்.கே.மேட்டூரைச் சேர்ந்த மூர்த்தி (39), மோகன்குமார் (32), ஜெயராமன் (60) மற்றும் வேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த நாச்சிமுத்து (45) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 223 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in